இந்த கவிதையை தந்த அருமை நண்பன் பாஸ்கருக்கு நன்றி
"மிறாபு பாலத்தின்கீழ் செல்கிறது சீன் நதி
அதையொத்து இசைகிறது நம் காதல்கள்
அவசியமாய் நான் நினைவுறுத்திக் கொள்கின்றேன்
எப்போதும் துன்பம் கடந்தபின் இன்பம்
தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்
கையோடு கை கோர்த்து முகத்தை முகம் நோக்க
நாம் நிற்கையில் நம் கைகள்
பிணைத்த பாலம் அதன் கீழ்
களைத்த அலைகள் முடிவற்ற காட்சி
தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்
ஓடும நதி போல் விட்டுப் போகிறது காதல்
காதல் போகிறது
மெல்ல அடங்கும் நம் வாழ்க்கை
உக்கிரமாய்த் தாக்கும் நம்பிக்கை
தொடரும் இரவுகள் மணியோசை ஒலிக்க
செல்கின்றன நாட்கள் இருக்கின்றேன் நான்
நாட்கள் போம் வாரங்கள் போம்
இழந்த காலம் கழிவது கிடையாது
திரும்புவதில்லை கடந்த காதல்கள்
மிறாபு பாலத்தினடி செல்கிறது சீன் நதி.
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நண்பரே... உங்கள் தளத்துல இந்த கவிதையை பதிப்பித்து என்னைப் பெருமைப் படுத்திட்டீங்க. நன்றி
பதிலளிநீக்குஒரு சிறு திருத்தம். இதை எழுதியது Apollonaire என்ற பிரஞ்சு கவிஞர். அதை தயவு செய்து பதிவில் தெளிவு படுத்தவும்.
பதிலளிநீக்கு