ஒரு ருஷிய கவிஞரின் கவிதை வரிகளை இணையத்தில் படிக்க நேர்ந்தது.
தமிழில் தழுவி எழுத முயற்சித்தேன்.
சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்கவும்.
ஆங்கில மொழிபெயர்ப்பும் எனது தமிழ் தழுவலும்
I Don't Know If You're Alive Or Dead by Anna Akhmatova
I don't know if you're alive or dead.
Can you on earth be sought,
Or only when the sunsets fade
Be mourned serenely in my thought?
All is for you: the daily prayer,
The sleepless heat at night,
And of my verses, the white
Flock, and of my eyes, the blue fire.
No-one was more cherished, no-one tortured
Me more, not
Even the one who betrayed me to torture,
Not even the one who caressed me and forgot.
இருக்கிறாயா? இல்லையா?
தெரியாது எனக்கு
எங்கே இருப்பாய்?
உலகில் எங்கேயோ,
அல்லது என் எண்ணத்தில் மட்டுமா?
தெரியாது எனக்கு.
அனைத்தும் உனக்கே.
என் தினசரி பிரார்த்தனையும்,
தூக்கமற்றதால் உஷ்ணமான இரவுகளும்
வானத்தில் பறக்கும் புறாக் கூட்டமாய்
வெள்ளை காகிதத்தில் எழுதிச் செல்லும்
என் கவிதை வரிகளும்,
நெருப்பில் உள்ள நீலமாய் என் விழிகளும்
அனைத்தும் உனக்கே
வேறு யாரும் இல்லை
என்னை
விரும்பி கொல்லவோ,
கொல்ல விரும்பியோ
வேறு யாரும் இல்லை
உன்னை விட
என்னை
நம்பிக்கை துரோகம் செய்து வதைத்தவர் கூட
உன்னை விட
என்னை ஆவலுடன் தழுவ வந்து
தழுவி பின் மறந்து செல்லும் தென்றலைப் போல்
வேறு யாரும் இல்லை
உன்னை விட
- கோ.சு.வீரராகவன்
உங்களுக்குள் ஒரு கவிஞன் உறங்கிக்கொண்டு இருப்பது இத்தனை நாள் தெரியாமல் போயிற்றே!
பதிலளிநீக்குதமிழில் சரளமாக எழுதுகிறீர்கள்- மொழிபெயர்ப்பைப் படிக்கிற உணர்வு எழவில்லை, நல்ல முயற்சி.
இன்னும் நிறைய செய்யவும்- நமது பார்வையை விரிவுபடுத்த உங்கள் கவிதைகளும் மற்ற முயற்சிகளும் உதவட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.