திங்கள், 12 பிப்ரவரி, 2018

நிழலுக்கு வெள்ளையடிப்பவன்


நிழலுக்கு வெள்ளையடிக்க முடிவு செய்தேன்
செயல்மறந்து வாழ்த்தினேன் தமிழ்த்தாயை
அயல்நாட்டினன் அகன்ற பின்னர்
நிழலுக்கு வெள்ளையடிக்க முடிவு செய்தேன்

அயராது உழைப்பவனை சுரண்டி வாழ
அயராது ஆட்சியில் அமர்ந்தவரும்
அயகோ என அலறச் செய்தவரும் ஆண்டதால்
நிழலுக்கு வெள்ளையடிக்க முடிவு செய்தேன்

விழலுக்கு நீர்பாய்ச்சி ஒய்ந்த பின்னர் எடுத்த முடிவு
குழலூதச் சொல்கிறது ஒரு தரப்பு நானோ
நிழலுக்கு வெள்ளையடிக்க முடிவு செய்தேன்

பழங்கதைப் பேசி பூசணியை சோற்றில் மறைக்கிறது
முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு விழுமா என
விளக்கும் அயல்நாட்டு பல்கலைக் கழக பேச்சு! நானோ
நிழலுக்கு வெள்ளையடிக்க முடிவு செய்தேன்

கலங்காதிரு மனமே வெள்ளையடிப்போம் இனி
வெள்ளை நிறத்திலொரு பூனை வளர்த்த கவிஞனால்
வெள்ளைச் சோறுண்டு உடலுயரத்தை மட்டும் வளர்த்து
வெள்ளை நிற உடையை அணிந்து
வெள்ளை நிற மாலையணிந்து பூச் சூடியவளை
எள்ளி நகையாடியது கண்டு வெருண்டு
தள்ளி நின்றே வெள்ளையடிக்கிறேன்.

வெள்ளைத் தாள் மறைக்கப்பட்டது நவம்பர் எட்டில்
வெள்ளை மாட்டைப் பிடிக்க புறப்பட்டது ஜனவரி எட்டில்
நானோ நிழலுக்கு வெள்ளையடிக்க முடிவு செய்தேன்.
    இன்னும் வீரா தொடரவேண்டுமா இந்த இம்சை கவிதையை?