புதன், 13 ஜூலை, 2011

அறிவிப்பு

ஜெயமோகன் அவர்களின் காவிய முகாம் உதகையில் நடந்தது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அந்த அனுபவங்களை சுருக்கமாக இன்னொரு பதிவரின் வலைப் பூவில் வெளிவர இருக்கிறது. விரிவான கட்டுரைகள் எனது முடிக்கப் படாத சிறிய தொடர்கள் முடிந்த பின்னர் வெளிவரும்.

மணிமேகலை இயம்பும் கணிதமும், அந்த நாளும் வந்திடாதோ ஆகியன நீண்டத் தொடர்கள்.

மணிமேகலை கட்டுரையில் முதலில் முதல் 26 காதைகளுக்கு நாவலர் பண்டித. ந.மு.வெங்கடசாமி நாட்டாரவர்களும், இறுதி 4 காதைகளுக்கு பேராசிரியர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையவர்களும் உரை எழுதியுள்ளனர். எளிய தமிழில் பேராசிரியர். துரை.தண்டபாணி எழுதியுள்ளார். இவருடைய உரையை உமா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அதனையே எடுத்து எழுதுகிறேன்.
வேறு யாருமே உரை எழுதவில்லை என்பது வியப்புக்கு உரியது.

சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதைக்கு இதுவரை எந்த கணித ஆசிரியரும் விளக்க முன் வரவில்லை என்பது வேதனைக்கு உரியது.

எனவேதான் இதிலுள்ள கணித நுட்பங்களை எளிய தமிழில் ஆய்ந்து எழுதவிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக