நிழலுக்கு வெள்ளையடிக்க
முடிவு செய்தேன்
செயல்மறந்து வாழ்த்தினேன்
தமிழ்த்தாயை
அயல்நாட்டினன் அகன்ற பின்னர்
நிழலுக்கு வெள்ளையடிக்க
முடிவு செய்தேன்
அயராது உழைப்பவனை சுரண்டி
வாழ
அயராது ஆட்சியில் அமர்ந்தவரும்
அயகோ என அலறச் செய்தவரும்
ஆண்டதால்
நிழலுக்கு வெள்ளையடிக்க
முடிவு செய்தேன்
விழலுக்கு நீர்பாய்ச்சி
ஒய்ந்த பின்னர் எடுத்த முடிவு
குழலூதச் சொல்கிறது ஒரு
தரப்பு நானோ
நிழலுக்கு வெள்ளையடிக்க
முடிவு செய்தேன்
பழங்கதைப் பேசி பூசணியை
சோற்றில் மறைக்கிறது
முழங்காலுக்கும் தலைக்கும்
முடிச்சு விழுமா என
விளக்கும் அயல்நாட்டு பல்கலைக்
கழக பேச்சு! நானோ
நிழலுக்கு வெள்ளையடிக்க
முடிவு செய்தேன்
கலங்காதிரு மனமே வெள்ளையடிப்போம்
இனி
வெள்ளை நிறத்திலொரு பூனை
வளர்த்த கவிஞனால்
வெள்ளைச் சோறுண்டு உடலுயரத்தை
மட்டும் வளர்த்து
வெள்ளை நிற உடையை அணிந்து
வெள்ளை நிற மாலையணிந்து
பூச் சூடியவளை
எள்ளி நகையாடியது கண்டு
வெருண்டு
தள்ளி நின்றே வெள்ளையடிக்கிறேன்.
வெள்ளைத் தாள் மறைக்கப்பட்டது
நவம்பர் எட்டில்
வெள்ளை மாட்டைப் பிடிக்க
புறப்பட்டது ஜனவரி எட்டில்
நானோ நிழலுக்கு வெள்ளையடிக்க
முடிவு செய்தேன்.
– இன்னும் வீரா தொடரவேண்டுமா இந்த இம்சை கவிதையை?