கடந்த இரு மாதங்களாக தேர்வு நேரம் மற்றும் நுழைவுத் தேர்வு பயிற்சி என பணியில் இருந்ததாலும் சோம்பலாலும் எந்த பதிவும் எழுதவில்லை. ( நண்பர் பாஸ்கர் வற்புறுத்தியும் கூட). இன்று எழுத நேர்ந்ததற்கு காரணம் எங்கள் ஷீத்தல்.
நேற்று காலை 11 மணியளவில் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான் என்பதை என்னால்
இன்னும் நம்ப முடியவில்லை.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செல்லப் பிராணிகளைப் பற்றி அதிகம் சொல்ல துடிப்பார்கள்.
என்னால் சொல்ல முடிந்தது தற்போது இதுதான்.
எங்கள் வாயில்லாக் குழந்தை ஏழே வயதில் எங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து விட்டான். கடைசி நிமிடங்களில் எங்களை தொட்டுத் தொட்டு ஏதோ சொல்ல நினைத்தது என்ன? தெரியவில்லை.