26. செய்வதற்கு பிறரால் இயலாத செயல்களை
செய்வதற்கு இயலும் பெரியோர்கள்..
செய்வதற்கு பிறரால் இயலும் செயல்களை
செய்வதற்கு அஞ்சி நிற்பர் சிறியோர்கள்.
27. தொட்டு அறிவது செடியே,
மொட்டு உள்ள நாவினால் அறிவது நத்தையே
மூக்கினால் முகர்ந்து அறிவது எறும்பே
நோக்கினால் அறிவது நண்டே
கேள்வி அறிவால் அறிவது விலங்கே
ஆள்கின்ற ஐம்புலனுடன் பகுத்த்றிவர் பெரியோர்களே
28. கண்டும் கேட்டும் அனைத்து செய்திகளையும்
விண்டுரைத்த பெரியோர் பெருமையை,
எடுத்து உரைக்கும் அவர்களது நூல்களில்
தொடுத்து உள்ள கருத்துக்களே
29. நல்ல குணங்களால் வாழ்க்கை எனும் மலையில் முன்னேறிய
நல்ல மனங்களால் சினம் எனும் சிறு கல்லும் இடறி விழுவர்.
30 அந்த அன்பு எனும் தன்மை கொண்டதால் அந்தணர் என்று அழைப்பர் பெரியோர்களை.